உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாகேஸ்வரி அம்மனுக்கு இளநீர் அபிஷேகம்

நாகேஸ்வரி அம்மனுக்கு இளநீர் அபிஷேகம்

தாம்பரம்:மேற்கு தாம்பரம், நாகேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மேற்கு தாம்பரம், முத்துரங்கம் பூங்காவில், ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு, 1,008 இளநீர் அபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, காலை, 6:00 மணிக்கு மங்கள இசை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனின் அருளை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி