மேலும் செய்திகள்
கஞ்சா விற்றவர் கைது
26-Feb-2025
செங்கல்பட்டு; செங்கல்பட்டு, சின்னநத்தம் கே.கே., தெருவைச் சேர்ந்தவர் அஜய் என்கிற சிவப்பிரகாஷ், 25. தற்போது, செங்கல்பட்டு அடுத்த இளந்தோப்பு கிராமத்தில் வசிக்கும் இவர், செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமங்களில், கஞ்சா விற்பனை செய்து வந்தார்.இதுகுறித்து, செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த பிப்ரவரி மாதம், அஜய்யை கைது செய்து, மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரையின்படி, அஜய்யை குண்டர் சட்டத்தில் அடைக்க, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.இந்த உத்தரவையடுத்து, சிறையில் உள்ள அஜய்யிடம், குண்டர் சட்ட நகலை அளித்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
26-Feb-2025