உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த நெய்குப்பியைச் சேர்ந்தவர் குணசேகரன், 22. நேற்று காலை 11:00 மணிக்கு, பேரம்பாக்கம் சாலை பகுதி வயலில், இயந்திரம் மூலம் நெல் அறுவடை நடந்தது.அப்போது, இயந்திரத்தில் உரசும் வகையில் தாழ்வாகச் சென்ற மின்கம்பியை, குணசேகரன் சரிசெய்ய முயன்றார். அதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தம்பி கார்த்திக் அளித்த புகாரின்படி, சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ