உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேம்பாலத்தில் போட்டோ எடுக்கும் வாலிபர்கள் சிங்கபெருமாள் கோவிலில் விபத்து அபாயம்

மேம்பாலத்தில் போட்டோ எடுக்கும் வாலிபர்கள் சிங்கபெருமாள் கோவிலில் விபத்து அபாயம்

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தில் போட்டோ எடுக்கும் வாலிபர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக சிங்கபெருமாள் கோவில் உள்ளது. சிங்கபெருமாள் கோவில் --- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ஆப்பூர், திருக்கச்சூர், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, 138.27 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வார விடுமுறை மற்றும் மாலை நேரங்களில், இப்பாலத்தில் மொபைல் போனில் போட்டோ எடுக்கும், ஆசையில், வாலிபர்கள் ஈடுபட்டு வருவதால், விபத்து அபாயம் உருவாகி உள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: மேம்பாலத்தின் ரவுண்டானா வளைவில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி போட்டோ எடுப்பதால், கனரக வாகனங்கள் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் மேம்பாலத்தின் ரவுண்டானா பகுதியில் இருந்து புகைப்படம் எடுத்தால் அழகாக தெரியும் என்ற ஆசையில், வாலிபர்கள் பலரும் ஆபத்தை உணராமல் வாலிபர்கள் மொபைல் போனில் படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி