உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரபல ரவுடி மாலைக்கண் செல்வம் கைது

பிரபல ரவுடி மாலைக்கண் செல்வம் கைது

சென்னை:வடசென்னை பகுதியில் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்த, பிரபல ரவுடி மாலைக்கண் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் ரவுடிகள் கொட்டத்தை ஒழிக்கும் வகையில், கடும்நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து, உதவி கமிஷனர்கள் நவீன் சந்திர நாகேஷ், பீர்முகமது, இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர், சம்பத் கொண்ட தனிப்படையினர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த பிரபல ரவுடி, மாலைக்கண் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.இவர் வடசென்னையில் பிரபல ரவுடி கேட் ராஜேந்திரனின் கூட்டாளியாகவும், பின், தனியாகவும் ஆர்வத்தனம் செய்து வந்தவர்.கைதான மாலைக்கண் செல்வம், ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ