உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி அனுமதியின்றி சாலை துண்டிப்பு வேளச்சேரி தெருக்களில் அதிகரிக்கும் பள்ளம்

மாநகராட்சி அனுமதியின்றி சாலை துண்டிப்பு வேளச்சேரி தெருக்களில் அதிகரிக்கும் பள்ளம்

அடையாறு மண்டலம், 177வது வார்டு வேளச்சேரியில், 90க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதர பகுதிகளைவிட தாழ்வான தெருக்கள், இங்கு அதிகம்.இங்கு, குடிநீர், கழிவுநீர் குழாய்கள், மின்சார கேபிள், தொலைத்தொடர்பு கேபிள்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இவற்றை சீரமைப்பதற்காக பள்ளம் எடுத்த சாலைகளை, 24 மணி நேரத்திற்குள் பணி முடித்து, மூடிவிட வேண்டும். அவ்வாறு மூடப்பட்ட சாலை, பள்ளம் எடுத்த பகுதியில் திடீரென உள்வாங்குவதால், வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். .பெரும்பாலான சாலைகளில் பள்ளமாக உள்ளது. பருவமழையின்போது, பள்ளம் பெரிதாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தெருக்களாக மாறி விடும். தெருக்களில் பள்ளம் தோண்டும்போது, துறைகள் ஒருங்கிணைந்து பணி செய்யும் வகையில், அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ