உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் - லாரி மோதல் 15 பேர் படுகாயம்

பஸ் - லாரி மோதல் 15 பேர் படுகாயம்

ஸ்ரீபெரும்புதுார், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி, தடம் எண்: 76சி அரசு பேருந்து நேற்று மாலை சென்றது. 30க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலுார் அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிக்காக எதிர் திசையில் திருப்பி விடப்பட்டது.அப்போது, சென்னை நோக்கி வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, அரசு பேருந்து மீது மோதியது. இதில், அரசு பேருந்தின் முன் பகுதி உருக்குலைந்தது. பின்னால் வந்த ஷேர் ஆட்டோ பேருந்தின் பின்புறம் மோதியது.இதில், அரசு பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோவில் பயணித்த, 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்