உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் வந்து ஓட்டுப்பதிவு ஒரே குடும்பத்தில் 15 பேர் ஓட்டு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் வந்து ஓட்டுப்பதிவு ஒரே குடும்பத்தில் 15 பேர் ஓட்டு

மத்திய சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போடுவதற்காக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறியவர், பெரியவர் என, 21 பேர் நேற்று வந்தனர். அவர்களில், 15 பேர் ஓட்டளித்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:எங்களின் பூர்வீகம் தேனாம்பேட்டை. கடந்த 1977ல் இருந்து இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும், அனைவரும் ஒன்றாக வந்து தான் ஓட்டுப்போடுவோம்.தற்போது, நாங்கள் தனித்தனி குடும்பமாக வசித்தாலும், ஒன்றாக சேர்ந்து ஓட்டுப்போட செல்ல வேண்டும் என்பதற்காக பூர்வீக முகவரியை மாற்றவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்