உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாக்டர் வீட்டில் 17 சவரன் நகை மாயம்

டாக்டர் வீட்டில் 17 சவரன் நகை மாயம்

அமைந்தகரை,அமைந்தகரை அய்யாவு காலனியைச் சேர்ந்தவர் ஜெயா சபரி ராஜா, 38; தனியார் மருத்துவமனை டாக்டர். இவர், அமைந்தகரை காவல் நிலையத்தில், நேற்று புகார் ஒன்றை அளித்தார்.புகாரில் கூறியுள்ளதாவது:இரு நாட்களுக்கு முன், நானும் என் மனைவியும் பணிக்கு சென்ற நிலையில், மாமியார் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டு வேலை செய்யும் செல்வி என்ற பெண் வந்து வேலை செய்துள்ளார்.அவர் இருந்த அறையில் இருந்து சத்தம் வந்ததால், என் மாமியார் சென்று பார்த்துள்ளார். உடனே, அப்பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டில் சோதித்த போது, 17 சவரன் தங்க நகை மாயமானது தெரிந்தது.இதுகுறித்து விசாரித்து நகையை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார்.அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து, பணிப்பெண் உள்ளிட்டோரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை