உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் கஞ்சா கடத்திய 2 பெண்கள் சிக்கினர்

ரயிலில் கஞ்சா கடத்திய 2 பெண்கள் சிக்கினர்

சென்னை,ஒடிசா மாநிலம், புரியில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த விரைவு ரயில் பயணியரை, போலீசார் சோதனை செய்தனர். சந்தேகத்தின்படி, இரு பெண்களை பிடித்து விசாரித்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்த போது, அவர்களது பைகளில் 20 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள், ஒடிசாவைச் சேர்ந்த சரோஜினி, நளினி என தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, யாரிடம் விற்க வந்தனர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்திய போது, 690 போதை மாத்திரைகள் வைத்திருந்த கார்த்திக் என்ற வாலிபர் சிக்கினார்.இவர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து மாத்திரை வாங்கி வந்து, சைதாப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் விற்றது தெரிந்தது. அவரை பிடித்து, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி