உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

குன்றத்துார் : தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்றத்துார் மற்றும் மாங்காடு ஆகிய நகராட்சிகளில் உள்ள இறைச்சி கடை, காய்கறி கடை, சூப்பர் மார்கெட் மற்றும் வணிக கடைகளுக்கு நகராட்சி கமிஷனர் ராணி தலைமையிலான அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.இரண்டு நகராட்சிகளிலும் 200 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 30 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கவர்களை தொடர்ந்து பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை