உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரோம்பேட்டை, சானடோரியத்தில் 24 மணி நேரமும் சரக்கு விற்பனை

குரோம்பேட்டை, சானடோரியத்தில் 24 மணி நேரமும் சரக்கு விற்பனை

குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், பல்லாவரம் மார்க்கமான பேருந்து நிறுத்தம் அருகே அணுகு சாலையை ஒட்டி டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.அதேபோல், சானடோரியத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த இரண்டு இடங்களிலும், 24 மணி நேரமும் சரக்கு விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது.காலையில் சென்றால், சரக்கிற்கு, இட்லி, மீன் குழம்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால், தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பலர், மதுவிற்கு அடிமையாகி, இந்த இரண்டு கடைகளில் அதிகாலையிலேயே ஆஜராகி விடுகின்றனர்.தொழிலாளர் தினமான, மே 1ம் தேதி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அன்று, இந்த இரண்டு கடைகளிலும், வெட்ட வெளிச்சமாக கள்ளத்தனமாக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை, போலீசார் கண்டுக்கொள்வதே இல்லை. இரு கடைகளிலும் 24 மணி நேர சரக்கு விற்பனையால், குடிமகன்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்; சமூக சீர்கேடு பிரச்னைகள் ஏற்படும். இப்பிரச்னையில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் தலையிட்டு, இந்த அட்டூழியத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை