உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு தாமதமானதால் ரூ.2.50 லட்சம் இழப்பீடு

வீடு தாமதமானதால் ரூ.2.50 லட்சம் இழப்பீடு

சென்னை, சென்னை கோயம்பேட்டில் 'மெரோசோன்' நிறுவனம் சார்பில், 2016ல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதில், 1.85 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்க, 1.60 கோடி ரூபாய் செலுத்தி, உதயராஜ், கவிதா உதயராஜ் ஆகியோர், 2016ல் ஒப்பந்தம் செய்தனர். இதன்படி, அந்நிறுவனம், 2017ல் வீட்டை ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால், ஒப்படைக்கவில்லை.இதுகுறித்து ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர், உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:வீடு ஒப்படைப்பு தாமதமானதற்காக, 2 லட்சம் ரூபாய், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக, 50,000 ரூபாய், வழக்கு செலவுக்காக, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி