உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர் மோதி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.28.11 லட்சம்

டூ - வீலர் மோதி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.28.11 லட்சம்

சென்னை:சென்னை மாவட்டம், சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாதேவன், 32. வங்கிக் கடன் முகவரான இவர், கடந்த 2020 டிச., 31ல், புழலில் இருந்து தாம்பரம் நெடுஞ்சாலை நோக்கி, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது, பூமாதேவன் சென்ற இரு சக்கர வாகனம் மீது, மற்றொரு இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில், கணவரின் இறப்பிற்கு 90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், மனைவி பிரியங்கா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி எஸ்.முத்து முருகன் முன் நடந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அதிவேகம், அஜாக்கிரதையாக, இருசக்கர வாகனத்தை ஓட்டியதே விபத்திற்கு காரணம். விபத்தில் மனுதாரரின் கணவருக்கு தலையில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு, அதில் இருந்து வெளியேறிய அதிகப்படியான ரத்தப்போக்கால் இறந்துள்ளார்.எனவே, பூமாதேவனின்மனைவி உள்ளிட்டோருக்கு, 28.11 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை