உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி முதல் நாளில் 4 புதிய மீட் சாதனை

மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி முதல் நாளில் 4 புதிய மீட் சாதனை

சென்னை, ஜூலை 13-

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், 40வது சப் - ஜூனியர், 50வது ஜூனியருக்கான மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில், நேற்று காலை துவங்கின. இதில், 15 - 17 வயதுக்கு குரூப் - 1; 12 - 14 வயதுக்கு குரூப் - 2; 10 - 11 வயது வரை குரூப் - 3 ஆகிய மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன.முதல் நாள் போட்டியை, மாநில சங்க புதிய தலைவர் திருமாறன் துவக்கி வைத்தார். 'குரூப் - 1' சிறுவர்களுக்கான, 400 மீ., 'ப்ரீ ஸ்டைல்' நீச்சலில் 'டர்ட்டில்ஸ்' அணி வீரர் கவின்ராஜ், போட்டி துாரத்தை 4 நிமிடம் 15:16 வினாடிகளில் கடந்து, புதிய 'மீட்' சாதனை படைத்தார்.கடந்த 2011ல் டர்ட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ஜெயவந்த் விஜயகுமார் 4 நிமிடம் 16:15 வினாடிகளில் கடந்தது சாதனையாக இருந்து வந்தது. 13 ஆண்டுகளுக்கு பின் கவின்ராஜ் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.'குரூப் - 2' சிறுவர்களுக்கான 50 மீ., 'பேக்ஸ் ட்ரோக்' நீச்சலில் திருநெல்வேலி மாவட்ட நீச்சல் சங்கத்தைச் சேர்ந்த எம்.எஸ்.நித்திஷ் பந்தயதுாரத்தை 31:35 வினாடிகளில் கடந்து, தன் சாதனையை தானே முறியடித்தார். புதிய சாதனை படைத்தார். கடந்தாண்டு இதே நித்திஷ், 32:02 வினாடிகள் கடந்தது சாதனையாக இருந்தது. 'குரூப் - -1' சிறுமியருக்கான 50 மீ., 'பிரஸ்ட்ரோக்' நீச்சலில் எஸ்.டி.ஏ.டி., டால்பின் அணியைச் சேர்ந்த பிரஷிதா போட்டி துாரத்தை, 34:56 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். முன்னதாக, 2014ல் டர்ட்டல்ஸ் அணி வீராங்கனை ஏ.வி.ஜெயவீணா 34:98 வினாடிகளில் கடந்தது சாதனையாக இருந்தது.'குரூப் - 2' சிறுமியருக்கான 100 மீ., பேக் 'ஸ்ட்ரோக்' நீச்சலில் சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி வீராங்கனை பிரமத்தி ஞானசேகரன் போட்டி துாரத்தை ஒரு நிமிடம் 09:72 வினாடிகளில், கடந்து புதிய 'மீட்' சாதனை நிகழ்த்தினார். முன்னதாக கடந்தாண்டு இதே பிரமிதி ஞானசேகரன் பந்தய துாரத்தை ஒரு நிமிடம் 11:23 வினாடிகள் கடந்தது சாதனையாக இருந்தது.துவக்க நாளான நேற்றைய போட்டியில் மொத்தம் 4 புதிய மீட்சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இச்சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை