உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற மூவருக்கு 5 ஆண்டு சிறை

கஞ்சா விற்ற மூவருக்கு 5 ஆண்டு சிறை

-சென்னை, சென்னை வால்டாக்ஸ் சாலையில், 2021 டிச.17ல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்,50, சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த ஜோசப்,58, சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த அலாவுதீன்,54 ஆகியோரை, பூக்கடை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார். மூன்று பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக மொத்தம் இரண்டு லட்சம் ரூபாயும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை