உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.50 லட்சம் மோசடி புகார்

ரூ.50 லட்சம் மோசடி புகார்

எம்.கே.பி.நகர், சென்னை, எம்.கே.பி.நகரை சேர்ந்தவர் முகில், 32. திருவள்ளூர், வேப்பம்பட்டு பகுதியில் உள்ள காமாட்சி நிதி நிறுவனத்தில், 2020ல், 50 லட்சம் ரூபாய் செலுத்தி பங்குதாரராக சேர்ந்தார். நிதி நிறுவனத்தில் இருந்து லாபத்தை தராததோடு, பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றுவதாக, எம்.கே.பி.நகர் போலீசில், முகில் புகார் அளித்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.வழக்கை விசாரித்த 10 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி எம்.கே.பி.நகர் போலீசாருக்கு அறிவுறுத்தியது.இதையடுத்து நிதி நிறுவன நிர்வாகிகள் மோதிலால், கலியபெருமாள் ஆகியோர் மீது எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ