உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 50 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு துறைமுகம் சாதனை

50 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு துறைமுகம் சாதனை

சென்னை:சென்னை துறைமுகத்தில் இருந்து கார்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், வெளிநாடுகளுக்கு கப்பல் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அதேபோல், வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள், மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், இறக்குமதி செய்யப்படுகின்றன.இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிக அளவாக 5.045 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு, சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.இதேபோல், கடந்த மாதம் 20 அடி நீளமுள்ள 1.70 லட்சம் சரக்கு கன்டெய்னர்களையும் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.இதற்கு முன் 2021 அக்., மாதம் மிக அதிகளவில் 1.53 லட்சம் டன் கன்டெய்னர்களை கையாண்டது.மேலும், கடந்த மாதம் 31ம் தேதி, ஒரே நாளில் இறக்குமதி செய்யப்பட்ட 23,534 டன் எக்கு கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன், 2023 நவ., 7ல் ஒரே நாளில் மிக அதிகபட்சமாக 20,100 டன் எக்கு கையாளப்பட்டது.இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக துறைமுக ஊழியர்கள், அதிகாரிகள், சென்னை கன்டெய்னர் டெர்மினல் நிறுவனம், சென்னை இன்டர்நேஷ்னல் டெர்மினல் நிறுவனம், எலைட் ஷிப்பிங் அண்டு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை