உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் லாரிக்கு ரூ.50,000 அபராதம்

கழிவுநீர் லாரிக்கு ரூ.50,000 அபராதம்

திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சியில், வேலப்பன்சாவடி தனியார் கல்லுாரி எதிரில், கழிவுநீர் லாரி ஒன்று, அங்குள்ள மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கொட்டுவதாக, நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், அந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.விசாரணையில், திருவேற்காடு, நுாம்பல் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான வாகனம் என தெரிந்தது.விதிமீறி நீர்நிலையில் கழிவுநீர் கொட்டியதற்காக, அவருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Raghavan
ஜூலை 14, 2024 14:23

ரஞ்சித் என்ன ஒன்னும் தெரியாத ஆளாகஇருக்க. ஸ்பாட்டிலேயே பேசி முடிச்சி இருக்கவேண்டாமா. இப்போதும் ஒன்னும் கெட்டு போய் விடவில்லை நேராக அலுவலகம் சென்று பார்த்தால் சரியாகிவிடும். அப்பறம் பெர்மனெண்ட்டாக அங்கேயே கொட்டலாம்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி