உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராயப்பேட்டையில் 764 கிலோ குட்கா சிக்கியது ரூ.5.45 லட்சம், 3 கார்கள் பறிமுதல்; 3 பேர் கைது

ராயப்பேட்டையில் 764 கிலோ குட்கா சிக்கியது ரூ.5.45 லட்சம், 3 கார்கள் பறிமுதல்; 3 பேர் கைது

சென்னை, சென்னையில், காரில் கடத்தி வரப்பட்ட 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 767 கிலோ குட்கா புகையிலை போதை பொருட்கள் சிக்கின. இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்த போலீசார், மூன்று கார்கள் மற்றும் 5.45 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, நேற்று முன்தினம் அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மூன்று கார்களை மடக்கி அதன் ஓட்டுனரிடம் விசாரித்தனர். இதில், மூவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகமடைந்த போலீசார் கார்களை சோதனையிட்டனர். இதில், மூன்று கார்களிலுமாக மொத்தம் 764 கிலோ குட்கா போதை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ், 27, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மதுசூதன் ஜான்கிட், 25, கீழகோட்டையூரைச் சேர்ந்த ராஜேந்திர பாரிக்கர், 29, ஆகியோர் என்பதும், மூவரும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து குட்கா புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.நேற்று மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 5.45 லட்சம் ரூபாய், தலா மொபைல் போன்கள், கார்களையும் பறிமுதல் செய்தனர். சிக்கிய குட்கா பொருட்களின் மதிப்பு 55 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.சிறப்பாக செயல்பட்ட அண்ணாசாலை காவல் நிலைய போலீசாரை, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பாராட்டினார். சென்னை, ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அம்பத்துார், ஆவடி, மாதவரம், சோழவரம் சுற்றுவட்டாரங்களில், போதைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக, கடந்த இரு நாட்களாக 50க்கும் மேற்பட்ட மளிகை, பெட்டிக்கடை, டீ கடைகளில், ஆவடி போலீசார் சோதனைகள் மேற் கொண்டனர்.அதில், குட்கா வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, 34 கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். தொடர்ந்து கஞ்சா, குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ