உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8 கிலோ கஞ்சா பறிமுதல்

8 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆலந்துார், அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மவுன்ட் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் தலைமையில் போலீசார், அப்பகுதியை தீவிரமாக கண்காணித்தனர்.அசோக் நகர், 100 அடி சாலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் கைப்பையுடன் சுற்றிய இருவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது.விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலம், உதயகிரியைச் சேர்ந்த பினுயல் பெய்க், 37, மற்றும் ஜிஹோஷிய மிஷால், 48, என்பது தெரியவந்தது.ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சூளைமேடு பகுதிகளில், சில்லரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ