உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆந்திர பெண்ணுக்கு பிரசவம் நடுவானில் பிறந்தது ஆண் குழந்தை

ஆந்திர பெண்ணுக்கு பிரசவம் நடுவானில் பிறந்தது ஆண் குழந்தை

சென்னை, சிங்கப்பூரில், நேற்று முன்தினம் இரவு 179 பயணியருடன் புறப்பட்ட 'இண்டிகோ' விமானம், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.அதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தீப்தி சரிசு, 28, தன் குடும்பத்தினருடன் பயணித்தார்.விமானம் நடுவானில் பறந்தபோது, அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கு வந்த விமான பணிப்பெண்கள், கர்ப்பிணி அருகில் இருந்த ஆண் பயணியரை, வேறு இருக்கைகளுக்கு மாற்றி, யாரும் பார்க்காதவாறு சுற்றிலும் துணி கட்டினர்.சூழ்நிலையை உணர்ந்த விமானியும், விமானத்தை சீராக இயக்கினார். அவர் வாயிலாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் தயார்படுத்தப்பட்டனர்.பெண்ணிற்கு வலி அதிகரித்ததால், அவருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, பயணியர் பட்டியலில் டாக்டர்கள் இருக்கின்றனரா என பணிப்பெண்கள் சோதித்தனர்.அதற்குள், பெண் டாக்டர் ஒருவர் தாமாக வந்து, கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து தீப்திக்கு, சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று அதிகாலை 4:17 மணிக்கு, அந்த விமானம் சென்னை வந்தடைந்தது. தயாராக இருந்த விமான நிலைய மருத்துவக் குழுவினர், தாயையும், குழந்தையையும் பரிசோதித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீப்தியின் குடும்பத்தினர், தாயும் - சேயும் நலமாக இருப்பதாக கூறி, சக பயணியருக்கு இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை