உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓடும் காரில் திடீர் தீ உயிர் தப்பிய குடும்பம்

ஓடும் காரில் திடீர் தீ உயிர் தப்பிய குடும்பம்

சென்னை, குன்றத்துார் அடுத்த சோமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்துரு, 38; வழக்கறிஞர். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு 'மகேந்திரா சைலோ' காரில் குடும்பத்தினர் ஐந்து பேருடன் சென்று கொண்டிருந்தார்.பரங்கிமலை - - பூந்தமல்லி சாலை, காட்டுப்பாக்கம் அருகே, காரின் முன்பகுதியில் புகை வந்தது. சுதாரித்த சந்துரு, காரை ஓரமாக நிறுத்தி, குடும்பத்தினரை பத்திரமாக இறக்கினார். காரின் முன் பகுதி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.அங்கிருந்தோர் அலறியடித்து ஓடிய நிலையில், மெட்ரோ ரயில் கட்டுமான பணி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், தீயணைக்கும் கருவியை வைத்து, காரின் தீயை அணைத்தனர். காரின் முன் பகுதி முழுதும் தீயில் எரிந்தது. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி