உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சற்று தணிந்த வெப்பம் புழல் ஏரியால் மகிழ்ச்சி

சற்று தணிந்த வெப்பம் புழல் ஏரியால் மகிழ்ச்சி

செங்குன்றம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, சோழவரம் ஏரிகளில் இருந்து, சமீபத்தில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 29ம் தேதி சோழவரம் ஏரியில் இருந்தும், இருநாட்களுக்கு முன் பூண்டி ஏரியில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது.பருவ மழைக்காலத்தில் மட்டுமே நிரம்பி, 21.20 அடி உயரத்திற்கு, 3.3 டி.எம்.சி., நீர் இருப்புடன் ரம்மியமாக காட்சியளித்த புழல் ஏரி, வரத்து காரணமாக, தற்போது 19.95 அடி உயரத்திற்கு, 3.002 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது. கடல் போல அலை தள்ளாடும் புழல் ஏரி நீர் இருப்பால், அதன் சுற்றுவட்டாரங்களான செங்குன்றம், புழல், சூரப்பட்டு, பம்மதுகுளம், திருமுல்லைவாயல், புதுார், அம்பத்துார் பகுதிகளில், வெப்ப அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.மாலை வேளையில், ஏராளமானோர் ஏரிக்கரைக்கு வந்து குளிர்ந்த காற்றை அனுபவித்து செல்கின்றனர். இரவிலும், சுற்றுவட்டாரங்களில் குளிர்ந்த காற்று வீசுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை