உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

மணலிபுதுநகர், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார், 55, மணலிபுதுநகர், 139வது பிளாக்கில் வசிக்கும் தன் தம்பி வீட்டில் தங்கி, பொன்னேரி நெடுஞ்சாலையில் உள்ள, ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, பெட்ரோல் பங்க்கிற்கு பைக்கில் வந்த இருவர், வரிசையில் நிற்காமல் அடாவடி செய்து, பெட்ரோல் நிரப்புமாறு முத்துகுமாருடன் வாக்குவாதம் செய்து உள்ளனர்.அவர் நிரப்பாததால், திரும்பிச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து பைக்கில் வந்த அவர்கள், முத்துகுமாரை கையால் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.இதுகுறித்து மணலிபுதுநகர் போலீசார் விசாரித்தனர், இதில், மணலியை சேர்ந்த கொத்தனாரான ஜெய்கிருஷ்ணன், 30, என்பவரை, நேற்று காலை கைது செய்தனர். போலீசார், ஒன்றரை அடி நீள கத்தி, பைக் உள்ளிட்டவற்றை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை