உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பறக்கும் படை சோதனைக்கு புதிதாக சிக்கல்

பறக்கும் படை சோதனைக்கு புதிதாக சிக்கல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ குழு என, 84 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில், இக்குழுவினருக்கு புதிதாக சிக்கல் எழுந்துள்ளது.பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் கூறியதாவது:தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பறக்கும் படைக்கு அதிக புகார்கள் வருகின்றன. வீடுகளில், பணம் உள்ளதா என ஆய்வு செய்ய நேரிடும்.அப்போது, கிராம நிர்வாக அலுவலர் அல்லது தலையாரி என, யாராவது உடன் இருக்க வேண்டும். ஆனால், இருவருமே ஊரில் இருப்பதில்லை. அவர்கள் வரும் வரை, வீடுகளில் சோதனை செய்யாமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ