உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவலர் குடியிருப்பில் சிறுவனை விரட்டி கடித்த வளர்ப்பு நாய்

காவலர் குடியிருப்பில் சிறுவனை விரட்டி கடித்த வளர்ப்பு நாய்

ஆலந்துார், ஆலந்துார், மவுன்ட் காவல் நிலையம் பின்புறம், ராஜா தெருவில் காவலர் குடியிருப்பு உள்ளது. இதில், இ- - பிளாக்கை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரிவு தலைமை காவலர். இவர் வீட்டில் 'சைபீரியன் ஹஸ்கி' வகை நாயை வளர்த்து வருகிறார்.அதே வளாகத்தில் உள்ள பி - பிளாக்கை சேர்ந்தவர் வினோதா. அசோக் நகரில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில், காவலராக வேலை செய்கிறார். இவரின் சகோதரரின் மகன் அஸ்வந்த், 11, என்ற சிறுவன், கோடை விடுமுறைக்காக வினோதா வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கார்த்திகேயனின் மகன் அஸ்வந்த், 12, வளர்ப்பு நாயை வெளியில் அழைத்து வந்துள்ளார். அங்கு, சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அஸ்வந்த்தை, விரட்டித் துரத்தி நாய் கடித்தது. தப்பி ஓடிய சிறுவன் கீழே விழுந்து, கை, காலில் காயம் ஏற்பட்டுள்ளது.அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் இது தொடர்பாக காவலர் வினோதா புகார் அளித்தார். இது குறித்து மவுன்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை