| ADDED : ஜூன் 22, 2024 12:32 AM
வடபழனி, வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராகவேந்திரா, 34. இவர் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு சிகரெட் வாங்குவதற்காக, அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது கடைக்காரர் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறி, உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த இருவர், சிகரெட் வேண்டும் என கேட்டு, சத்தம் போட்டனர். கடைக்காரர் உள்ளே சென்றுள்ளதாகவும், காத்திருக்கும் படியும் ராகவேந்திரா கூறியுள்ளார்.போதையில் வந்த இருவரும், ஆத்திரமடைந்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சூடான பாலை, ராகவேந்திரா மீது ஊற்றிவிட்டு தப்பிச் சென்றனர்.இதில் படுகாயமடைந்த ராகவேந்திரா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரித்தனர். ரவுடி சந்தீப்குமாரும் அவரது நண்பரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரில் ரவுடி சந்தீப்குமார், நேற்று கைது செய்யப்பட்டார்.