விபத்தில் வாலிபர் பலி
சென்னை, திரிசூலம், முக்காணி அம்மன் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 37. நேற்று முன்தினம் இரவு, தேனாம்பேட்டை அண்ணா சாலை வழியாக 'பைக்'கில் சென்றார். முன்னே சென்ற பைக்கில் மோதி விழுந்ததில், படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.