| ADDED : ஜூலை 04, 2024 12:25 AM
திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, எஸ்.எம்., நகரைச் சேர்ந்தவர் கோகுல், 19. அவர் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், எஸ்.எம்.நகர் பிரதான சாலையில் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளார். இதில் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ராகேஷ், 24, ராஜ்கமல், 25, காஞ்சி, 23, கார்த்தி ஆகிய நான்கு பேருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1:45 மணியளவில், காந்தி நகர் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி ஜிம் அருகில் கோகுல் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ராகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மூவரும், ரேஸ் பிரச்னையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென கோகுலை கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கோகுலை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கோகுல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், கோகுலை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நான்கு பேரையும் நேற்று மதியம் கைது செய்தனர்.