| ADDED : ஆக 18, 2024 12:27 AM
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லம் வடகால் சிப்காட்டில் 18,720 பேர் தங்கும் வகையில், பிரம்மாண்ட தொழிலாளர் தங்கும் விடுதியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். முதல்வரின் வருகையையொட்டி, ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் சாலையினை சீரமைக்கும் பணியில் ஏராளமான ஊழியர்கள் நேற்று காலை ஈடுபட்டனர்.போந்துார் அருகே, சாலையோரங்களில் உள்ள மண் திட்டுக்கள், செடி, கொடிகள் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுட்டிருந்த நிலையில், ஒரகடத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வேகமாக வந்த 'ஈச்சர்' லாரி, சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த, உத்திரமேருரைச் சேர்ந்த அஞ்சலா, 56, மீது மோதியது.இதில், அஞ்சலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் , வழக்கு பதிந்து, லாரி டிரைவரை பிடித்து விசாரிக்கின்றனர்.