உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அபிநவ சங்கர பாரதி சுவாமிகளிடம் கவர்னர் ஆசி

அபிநவ சங்கர பாரதி சுவாமிகளிடம் கவர்னர் ஆசி

சென்னை, சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்ட அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகளை, தமிழக கவர்னர் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டம், கூடலி மகா சம்ஸ்தானம், தக்சிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடத்தின், 72வது பீடாதிபதி, அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகள். இவரின் விஜய யாத்திரை, கடந்த 4ம் தேதி துவங்கியது.இதை முன்னிட்டு அன்று மாலை, பட்டன பிரவேஷம் மற்றும் ஷோபா யாத்திரை சென்னை, மேற்கு மாம்பலம், கோல்கட்டா காளி கோவிலில் இருந்து, அயோத்தியா மண்டபம் வரை நடந்தது.இதையடுத்து, அயோத்தியா மண்டபத்தில் மஹா சுவாமிகளின் அருளாசியும், சகஸ்ர சண்டி மஹா யக்ஞனமும் நடந்தது. அதன் பின், அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகள், பெசன்ட்நகரில் தங்கி பூஜைகள் நடத்தி அருளாசி வழங்கினார்.மேலும், பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, கிரஹ பிரவேசம் செய்து அருளாசியும் வழங்கினார்.இந்நிலையில் நேற்று மாலை, தமிழக கவர்னர் ரவி, அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். பின், சிறிது நேரம் உரையாடிவிட்டு புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ