உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடைமொழி ரவுடி கும்பல் கைது

அடைமொழி ரவுடி கும்பல் கைது

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, ஆடு தொட்டி பின்புறம், கன்னிகாபுரத்தை சேர்ந்த 'கருப்பா' என்கிற மணிகண்டன்,36 என்பவரை ஒன்பது பேர் கும்பல் கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். தலையில் ஐந்து வெட்டுகளுடன் கை, கழுத்து உள்ளிட்ட பல பகுதியில் காயம் பட்ட மணிகண்டன் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக, 'ஷவர்மா'ரவிச்சந்திரன்,19 என்பவர் காவல்நிலையத்தில் ஆஜர் ஆனார். ஆறு பேரை தனிப்படை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். புளியந்தோப்பை சேர்ந்த ஷான்பாஷா, 30, 'கோனு' சரவணன், 22, திரு.வி.க., நகரை சேர்ந்த சம்சுதீன்,18, ரிஷ்வான்,18, 'ஆறு மணி' சதீஷ்,18, 'நரம்பு' சஞ்சய்,21 உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள 'பூனை' அஜித், அந்தோணி ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ