உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதானி நிறுவனம் குடிநீர் மையம் அமைப்பு

அதானி நிறுவனம் குடிநீர் மையம் அமைப்பு

சென்னை, அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், காட்டுப்பள்ளி குப்பத்தில், 1,000 லிட்டர் கொள்ளளவு உடைய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள மக்களுக்கு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது சவாலாக உள்ளது. நிலத்தடி நீரில் அதிக உப்பு தன்மை காணப்பட்டதால், அதை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை நிலவி வந்தது.ஒவ்வொரு குடும்பத்தினரும், 20 லிட்டர் குடிநீருக்கு, 30 ரூபாய் செலவு செய்யும் நிலை இருந்தது. இதற்காக மாதம், 800 - 1,000 ரூபாய் செலவானது.மக்களின் கோரிக்கையை அடுத்து, அதானி காட்டுப்பள்ளி துறைமுகம், 1,000 லிட்டர் கொள்ளவு உடைய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைத்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயன்பெறுவர்.அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் தன் சமூக மேம்பாட்டு துறை வாயிலாக, மீஞ்சூர் வட்டாரத்தில், நான்கு ஊராட்சிகளில் தலா, 1,000 லிட்டர் திறன் உடைய நான்கு தானியங்கி சுத்திகரிப்பு குடிநீர் மையங்களை அமைத்துள்ளது.மேலும், ஐந்து அரசு பள்ளிகளில், 100 லிட்டர் கொள்ளளவு உடைய ஆறு தானியங்கி சுத்திகரிப்பு மையத்தையும் அமைத்துள்ளது. இதேபோல், பழவேற்காடு மருத்துவமனையிலும் அமைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை