உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னைக்கு கூடுதல் குடிநீர் ஆதாரங்கள் மூன்று ஆண்டுகளாக திட்டம் இழுபறி

சென்னைக்கு கூடுதல் குடிநீர் ஆதாரங்கள் மூன்று ஆண்டுகளாக திட்டம் இழுபறி

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.சென்னையின் குடிநீர் மற்றும் தொழில் தேவைகளுக்கு தினமும் 22 டி.எம்.சி., நீர் தேவைப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில், சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே, வெள்ள தணிப்பு நடவடிக்கை வாயிலாக மழைநீரை சேமித்து, குடிநீர் பற்றாக்குறை உள்ள நேரங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக, சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு ஏரிகளை மேம்படுத்த அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது.அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து மேம்படுத்த, 63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இந்த நிதி வாயிலாக, ஏரியின் கொள்ளளவை 0.35 டி.எம்.சி.,யாக உயர்த்தும் பணிகள் நான்கு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியின் கொள்ளளவு உயர்த்தும் பணிகள், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கின்றன.இப்பணிகள் முடிந்தால், ஏரியில், 0.65 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். மதுராந்தகம் ஏரியை துார்வாரும் பணிகள், 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. மூன்று ஆண்டுகளாக இப்பணிகள் ஜவ்வாக நடக்கின்றன.சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிலம் கையகப்படுத்துதல், ஒப்பந்ததாரர் ஒத்துழைப்பின்மை உள்ளிட்ட காரணங்களால், புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்கும் திட்டம் தாமதமாகி வருகிறது.வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கவுள்ள நிலையில், இதை நீர்வளத்துறை செயலர் மணிவாசன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.அ.தி.மு.க., ஆட்சியில் பொதுப்பணித்துறை செயலராக அவர் இருந்தபோதுதான், இந்த பணிகள் துவங்கப்பட்டன. அவர் நீர்வளத்துறைக்கு செயலராக பொறுப்பேற்றுள்ள நிலையில், கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முடிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ