உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமீறி ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க.,வினர் கைது

விதிமீறி ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க.,வினர் கைது

அம்பத்துார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அவதுாறாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே அம்பத்துார் பகுதி எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் லித்தோ ஜெ.மோகன் தலைமையிலான அ.தி.மு.க.,வினர் 80க்கும் மேற்பட்டோர், உருவபொம்மையை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்தில் திடீரென உருவ பொம்மை எரிக்கப்பட்டதால், பேருந்துக்காக காத்திருந்த பயணியர் அலறியடித்து ஓடினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரிடம் அனுமதி பெறாமல், உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அம்பத்துார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை