சென்னை, செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான 13 வயதிற்கு உட்பட்டோருக்கான வாலிபால் 'லீக்' போட்டி, ராயபுரத்தில் உள்ள அப்பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், திருவான்மியூர் அரசு பள்ளி, ஆலந்துார் மான்போர்ட், செயின்ட் பீட்ஸ், செயின்ட் பீட்டர்ஸ் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. அனைத்து போட்டிகளும் லீக் முறையில் நடத்தப்பட்டன. லீக் போட்டிகளில், மான்போர்ட் பள்ளி, 30 - 18 என்ற கணக்கில், திருவான்மியூர் அரசு பள்ளியையும், செயின்ட் பீட்ஸ் 30 - 23 என்ற கணக்கில், ராயபுரம் பி.ஏ.கே.பி., பள்ளியையும் தோற்கடித்தன.மற்ற போட்டிகளில் செயின்ட் பீட்டர்ஸ் அணி, 30 - 27 என்ற கணக்கில், திருவான்மியூர் அரசு பள்ளியையும், மான்போர்ட் பள்ளி, 30 - 24 என்ற கணக்கில், பி.ஏ.கே.பி., பள்ளியையும் வீழ்த்தின. அனைத்து போட்டிகளின் முடிவில், ஆலந்துார் மான்போர்ட் பள்ளி முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது.செயின்ட் பீட்டர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், செயின்ட் பீட்ஸ் மற்றும் திருவான்மியூர் அரசு பள்ளி, ராயபுரம் பி.ஏ.கே.பி., பள்ளிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து அசத்தின.