உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 ஏரிகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு

3 ஏரிகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 10 ஏரிகளின் கரை மற்றும் முகப்பு பகுதிகளை மேம்படுத்த சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதற்காக, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த ஏரிகளின் கரை மற்றும் முகப்பு பகுதிகளில் பொது மக்கள் பயன்பாட்டிற்கான பொழுது போக்குவசதிகள் உருவாக்கப்படும். இத்துடன் ஏரி பாதுகாப்புக்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும்.கட்டட வடிவமைப்பு மற்றும் கட்டுமான துறை அமைப்புகள் வாயிலாக, இதற்கான வடிவமைப்புகள் தயாரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான டெண்டர் நடவடிக்கைகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. இதன்படி, பெரும்பாக்கம் ஏரிக்கு 19 கோடி ரூபாய், ரெட்டேரி ஏரிக்கு 10.75 கோடி ரூபாய், கொளத்துார் ஏரிக்கு, 5 கோடி ரூபாய் என, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ