உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியை சீரமைக்க கூடுதலாக ரூ.43 கோடி 6 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்

ஏரியை சீரமைக்க கூடுதலாக ரூ.43 கோடி 6 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்

காஞ்சிபுரம், ங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில், மதுராந்தகம் ஏரி முதன்மையானதாக உள்ளது. நகருக்கு வெளியே, 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில், 2,411 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும், 932.49 ச.கி.மீ., நீர்வரத்து பகுதிகளாகவும் உள்ளன.மேலும், ஏரி கரையின் மொத்த நீளம் 3,950 மீட்டராக உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 24.30 அடி வரையில், 694 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும்.ஏரியிலிருந்து வடிந்து செல்லும் உபரி நீர் வாயிலாக, 36 கிராமங்களில், மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெற்று வருகின்றன.ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும், இந்த ஏரி வேகமாக நிரம்பினாலும், ஏரி தண்ணீர் விவசாயத்திற்கு போதாமல் இருந்தது.10 அடிக்கு வண்டல்இதற்கு முக்கிய காரணமாக, ஏரியின் 23 அடி உயரத்தில், 10 அடி உயரம் வரை வண்டல் மண் படிந்து காணப்பட்டது. இந்த நிலையில், ஏரியை துார் வாரி சீரமைக்க, 2021ல் 120 கோடி ரூபாயை, தமிழக அரசு நிதி ஒதுக்கியது. அதன் பின், 2022 ஜூன் மாதம், ஏரியை துார் வாரி சீரமைக்கும் பணிகள் துவங்கின.ஏரியின் மதகு, கரை, நீர்வரத்து கால்வாய், கால்வாயின் பக்கவாட்டு சுவர் போன்ற பல்வேறு பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்தன.இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:ஏரி சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட 120 கோடி ரூபாயில், 90 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏரியின் 'ஷட்டர்'களை புதிதாக அமைக்கவும், அதற்கான போக்குவரத்து செலவு, ஏரிக்கு ஷட்டர்களை கொண்டு செல்லுதல், ஷட்டர் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு, கூடுதலாக 43 கோடி ரூபாயை, தமிழக நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.இதன் வாயிலாக, அடுத்தகட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளோம்; ஆறே மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.எதிர்பார்ப்புஏற்கனவே, 2022, 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பெய்த பருவமழையின் போது, ஏரியில் நீர் தேக்கி வைத்து, பாசன வசதி பெற முடியவில்லை. வரும், பருவமழைக்குள் ஏரி சீரமைப்பு பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.- மதுராந்தகம் தாலுகா விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை