உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னைக்கு இணையான மற்றொரு நகரம் தேவை எம்.எல்.ஏ., கோரிக்கை சென்னைக்கு இணையான மற்றொரு நகரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கோரிக்கை

சென்னைக்கு இணையான மற்றொரு நகரம் தேவை எம்.எல்.ஏ., கோரிக்கை சென்னைக்கு இணையான மற்றொரு நகரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கோரிக்கை

சென்னை, ஜூன் 23-''சென்னைக்கு இணையான மற்றொரு மாநகரத்தை, புறநகர் பகுதியில் உருவாக்க வேண்டும்,'' என, பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில், மானிய கோரிக்கை விவாதத்தில், அவர் பேசியதாவது:கடந்த மூன்றாண்டு கால ஆட்சியில், நகர்ப்புறங்கள் தன்னிறைவு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகரங்களில் அதிகமான மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. வாகனங்கள் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் அதிகரித்து உள்ளன. மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டாலும், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.சென்னையில் வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன.கூட்டத்தை கட்டுப்படுத்த, சென்னைக்கு இணையான மற்றொரு மாநகரத்தை, புறநகர் பகுதியில் உருவாக்க வேண்டும். சென்னையில் குப்பையை தேக்கி வைக்க, மாநகராட்சி பகுதியில் குப்பை கிடங்கு இல்லை.அரசு புறம்போக்கு நிலம் அல்லது விலை கொடுத்து நிலம் வாங்கி, மிகப்பெரிய குப்பை கிடங்கை உருவாக்க வேண்டும்.துாய்மைப் பணியாளர் களுக்கு பணி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். பல இடங்களில் கழிவுநீரை சுத்திகரிக்காமல், மழைநீர் கால்வாயில் விடுகின்றனர். கூவம் ஆற்றிலும் நேரடியாக கழிவுநீரை விடுகின்றனர். இதை தடுத்து கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். திருமழிசை, பூந்தமல்லி பகுதிக்கு, செம்பரம்பாக்கம் ஏரி நீர் வழங்க வேண்டும்.நகரங்களில் பொழுதுபோக்கு இடங்களை உருவாக்க வேண்டும். சென்னையில் கணவன் - மனைவி வாரக்கடைசியில் பொழுது போக்க எங்கு செல்வது எனத் தெரியவில்லை.மெரினா பீச், கிழக்கு கடற்கரை சாலை சென்றால், கூட்டமாக உள்ளது. சென்னை அருகே மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை