உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒருவர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒருவர் கைது

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 16 பேர் கைதாகி உள்ள நிலையில், நேற்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கொலையாளிகளுக்கு, திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே, மாத்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா, 35, பணம் பட்டுவாடா செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.அவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவாவின் வீட்டில் இருந்து, 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி என, போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி