உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பலே செயின் பறிப்பு திருட ன் கைது

பலே செயின் பறிப்பு திருட ன் கைது

சென்னை:சென்னையில், தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 'பலே' திருடர்கள் நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.ஆதம்பாக்கம், கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பத்மாவதி, 61. இவர், ஏப்., 8ம் தேதி, அருகே உள்ள மருந்து கடைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், 2 சவரன் செயினை பறித்து தப்பினார்.சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அமோல், 32, என்பவரை நேற்று கைது செய்த போலீசார் 7 சவரன் நகை, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விமானத்தில் சென்னைக்கு வரும் அமோல், தனியார் விடுதிகளில் தங்கி செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.அவர் மீது, அண்ணா நகர், திருமங்கலம், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை காவல் நிலையங்களில், 10க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன.மேலும் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய வில்லிவாக்கம் சூர்யா, 26, பெரம்பூர் சத்யா, 24, சூளைமேடு ராம்குமார், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை