உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் நட்பு வாலிபர் மீது தாக்குதல்

பெண்ணிடம் நட்பு வாலிபர் மீது தாக்குதல்

பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், சாந்தி நகரைச் சேர்ந்தவர் கவுதம்குமார், 31. டிசைனர் வேலை செய்யும் இவர், நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து வீட்டிற்கு சென்றார்.அப்போது 11:00 மணி அளவில், வீட்டு வாசல் அருகே மறைந்திருந்த ஐந்து மர்ம நபர்கள், கவுதம்குமாரை சூழ்ந்து, 'பாக்யா என்ற பெண்ணிடம் பழகுவதை நிறுத்திவிடு' என மிரட்டினர். பின், இரும்பு கம்பிகளால் அவரை பயங்கரமாக தாக்கி, அங்கிருந்து தப்பினர்.இதில் வலது கை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த கவுதம் குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.மருத்துவமனை நிர்வாகம் தந்த தகவல்படி, பெரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ