உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சங்கர நேத்ராலயா தலைவர் பாலா ரெட்டிக்கு விருது

சங்கர நேத்ராலயா தலைவர் பாலா ரெட்டிக்கு விருது

சென்னை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின், சங்கர ரத்னா - 2023 விருது வழங்கும் விழா, சென்னை, நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்தது.இதில், அமெரிக்காவின் சங்கர நேத்ராலயாவின் தலைவர் பாலா ரெட்டி இந்துர்த்திக்கு, 'சங்கர ரத்னா' விருதை, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார். நிகழ்ச்சியில், ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:இந்த மருத்துவமனை, ஏழை மக்களுக்கு செய்யும் சேவை பாராட்டுக்குரியது. சிறப்பு கண் அறுவை சிகிச்சைக்காக, சில நேரங்களில் அரசும், சங்கர நேத்ராலயா மருத்துவமனையை அணுகுகிறது.சமுதாயத்தில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கையை தமிழகத்தில், 0.25 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க, அரசு எதிர்பார்க்கிறது. தமிழகத்தில் கண் நோயாளிகளில், 82 சதவீதம் கண்புரை பாதிப்பு, 6 சதவீதம் சர்க்கரை நோயால் கண் பாதிப்பு, 6 சதவீதம் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.அரசு மற்றும் தனியார் கண் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 6.50 லட்சம் பேர் கண்புரை அறுவை சிகிச்சை பெறுகின்றனர். கிராமப்புற மக்களிடம் கண்புரை பாதிப்பு குறித்து அறியாமை இருக்கலாம்.அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தி வரும், 'கண்ணொளி காப்போம்' திட்டத்தில், பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யப்படுகிறது.இதில், ஆண்டுக்கு இரண்டு லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.அதேபோல், 28 அரசு கண் தான வங்கியில், ஆண்டுக்கு 10,000 கண்கள் தானம் கிடைக்கிறது. ஆனாலும், கூடுதலான அளவில் கண்கள் கிடைத்தால், பலருக்கு பயன்படும்.தமிழகம் தான், உறுப்பு தானத்தில், முதன்மை மாநிலமாக உள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 109 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ