| ADDED : மே 09, 2024 12:11 AM
சென்னை, சென்னை, தரமணி வி.ஹெச்.எஸ்., மருத்துவமனையில், மரபணு அடிப்படையில் ஏற்படும் ரத்த கோளாறான தலசீமியா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, நடிகை சுஹாசினி பேசியதாவது:தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் பாதிப்புகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவு அளிப்பது நம் பொறுப்பு. தலசீமியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நெருங்கிய உறவுகளுடன் திருமணம் செய்யும் போது, ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திருமணம் செய்வதை விட, ரத்த பரிசோதனை செய்து திருமணம் மேற்கொள்வதன் வாயிலாக, தலசீமியா போன்ற நோய்கள் குழந்தைகளை பாதிக்காமல் தவிர்க்க இயலும்.இவ்வாறு அவர் பேசினார்.அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான ரத்த கோளாறுக்கு சிகிச்சையளிக்கும் நிபுணர் ரேவதி ராஜ் கூறுகையில்,''இந்தியாவில் தலசீமியா கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு சவாலாக உள்ளது. நம் எல்லாருடைய முயற்சிகள் வாயிலாக மட்டுமே, தலசீமியா பாதிப்பில்லாத குழந்தைகள் அடங்கிய எதிர்காலத்தை உருவாக்க முடியும்,'' என்றார்.