உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கலாம்

சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கலாம்

சென்னை:வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தின் கீழ் தளத்தில், பொதுமக்கள் குறைதீர் பிரிவு செயல்பட்டு வருகிறது. தினமும் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பொதுமக்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து, புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உள்ளார்.மற்ற வேலை நாட்களில் இணை கமிஷனர்களும், விடுமுறை நாட்களில் துணை கமிஷனர்களும் மனுக்களை வாங்க உள்ளனர். 'பெறப்படும் புகார்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு, விரைந்து தீர்வு காணப்படும்' என, கமிஷனர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ