உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்னி பேருந்து மோதி சென்னை முதியவர் பலி

ஆம்னி பேருந்து மோதி சென்னை முதியவர் பலி

கூடுவாஞ்சேரி:சென்னை, நந்தனம் பகுதியைச் சேர்ந்த ராமு, 52, நேற்று 'ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தில், கூடுவாஞ்சேரி அடுத்த சீனிவாசபுரம் சிக்னலில் இருந்து, தாம்பரம் நோக்கி செல்ல வலதுபுறம் திரும்பினார்.அப்போது, மதுரையில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, அவர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட ராமு பலத்த காயமடைந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே ராமு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ