உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுத்தமான குடிநீர் வாரியம் நடவடிக்கை

சுத்தமான குடிநீர் வாரியம் நடவடிக்கை

கொளத்துார், திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 66வது வார்டில் உள்ள பெரியார் நகரில், பல பகுதிகளில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வினியோகிக்கப்படுவது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, குறிப்பிட்ட வீடுகளில் ஆய்வு செய்த குடிநீர் வாரிய அதிகாரிகள், உடனடியாக தற்காலிக சீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:பெரியார் நகரில் 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் அப்படியே உள்ளன. சில பகுதிகளில் மட்டுமே குழாய் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில், மாற்றப்படாததால் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. ஆய்வு மேற்கொண்டுள்ள அதிகாரிகள், நிரந்தர நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி