உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரோந்து நடவடிக்கை கமிஷனர் தீவிரம்

ரோந்து நடவடிக்கை கமிஷனர் தீவிரம்

சென்னை, போலீஸ் இணை, துணை கமிஷனர்கள், காலை மற்றும் மாலையில் ரோந்து செல்ல வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிடடுள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள, கமிஷனர் அலுவலகத்தில், குற்றத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இணை, துணை கமிஷனர்களுடன், கமிஷனர் அருண் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அப்போது, சென்னையில் உள்ள, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை என, காவல் மாவட்டம் வாரியாக, சமீபத்தில் நடந்த குற்றங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.அப்போது, இணை, துணை கமிஷனர்கள் அலுவலகத்தில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்து, குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிப்பது வழக்கமான நடைமுறை தான். ஆனால் ரோந்து செல்லும் போது தான் மக்களின் கருத்தை அறிய முடியும். குற்றங்களையும் கட்டுப்படுத்த முடியும். அதனால், இணை, துணை கமிஷனர்கள், காலை, மாலை என, இரண்டு வேளைகளிலும் ரோந்து செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி