உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோவில் கடத்தி செயின் பறிப்பு

ஆட்டோவில் கடத்தி செயின் பறிப்பு

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் அடுத்த புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 35; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, நாவலுாரில் உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார்.அதீத போதையில், அங்கு ஆட்டோவில் குடித்து கொண்டிருந்த மூவரிடம் சென்று, வீட்டில் விடுமாறு கேட்டு உள்ளார்.மூவரும், அருண்குமாரை வீட்டில் விடுவதாக கூறி, செம்மஞ்சேரி, ஜவஹர் நகர் அருகே கத்திமுனையில் மிரட்டி, 3 சவரன் செயினை கழட்டி தரும்படி கேட்டு உள்ளனர்.அருண்குமார், தர மறுக்கவே, அவரை கத்தியால் வெட்டி, செயினை பறித்து தப்பினர். செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை